பெல்ஜியத்தில் பாஸ்போர்ட்களில் பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரங்கள் வரையப்பட்டு மக்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
பெல்ஜியத்தின் கார்ட்டூன் கதைகளை பிரபலப்படுத்துவதற்காக, மக்களின் பாஸ்போர்ட்களில் கார்ட்டூன் கதாபாத்திரங்களை வரைந்து கொடுக்கப்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.
அதாவது, நாட்டில் பிரபலமான ஸ்மர்ப்ஸ், டின்டின் ஆகிய கார்ட்டூன் கதாபாத்திரங்கள் பாஸ்போர்ட்டில் வரையப்படுகிறது. பிற நாடுகளின் பாஸ்போர்ட்களிலிருந்து, தங்களது பாஸ்போர்ட் தனித்துவமாக இருப்பதற்காகவும், அதனை பிரபலமாக்குவதற்காகவும் இவ்வாறு செய்யப்படுவதாக கூறப்பட்டிருக்கிறது.