அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவிற்கு தொடர்ந்து விடுக்கும் எச்சரிக்கையினால் தங்கள் நாட்டில் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக உக்ரைனின் அதிபர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யாவிற்கும், உக்ரேனுக்குமிடையே கிரீமியா தொடர்பாக பல ஆண்டுகளாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இதனையடுத்து ரஷ்யா தங்கள் நாட்டின் ராணுவ படைகளை உக்ரைன் எல்லையில் குவித்துள்ளது.
இதற்காக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகள் ரஷ்யாவை பலமுறை எச்சரித்துள்ளது. இந்நிலையில் உக்ரேனின் அதிபரான வோலோடின்மிர் ஜெலன்ஸ்கி முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது ரஷ்ய விவகாரம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் தொடர் எச்சரிக்கையினால் உக்ரைன் மிகக் கடுமையான பொருளாதார நெருக்கடியை சந்தித்துக் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ரஷ்யாவின் படை குவிப்பு காரணமாக தங்கள் நாட்டு மக்கள் நீண்டகாலமாகவே பெரும் அச்சத்தில் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.