Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

சட்ட விரோதமான செயல்…. வசமாக சிக்கிய வாலிபர்கள்…. போலீஸ் நடவடிக்கை…!!

சட்ட விரோதமாக மது விற்பனை செய்த 2 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அகஸ்தீஸ்வரம் பகுதியில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது சந்தேகப்படும் படியாக நின்று கொண்டிருந்த 2 பேரை காவல்துறையினர் பிடித்து விசாரித்துள்ளனர். அந்த விசாரணையில் அவர்கள் கோவளம் பகுதியில் வசிக்கும் விக்னேஷ் மற்றும் துரை என்பது தெரியவந்துள்ளது. இவர்கள் சட்டவிரோதமாக அப்பகுதியில் மது விற்பனை செய்துள்ளனர்.

இதனையடுத்து விக்னேஷ்  மற்றும் துரையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்த 20 மது பாட்டில்கள் மற்றும் 5000 ரூபாய் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |