தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பதவிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு வரும் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று முதல் தொடங்கியது.
இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் ஆட்டோ சின்னத்தில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, ஆட்டோ சின்னம் ஒதுக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்தில் விஜய் மக்கள் இயக்கம் கோரிக்கை வைத்தது. இதற்கு மாநில தேர்தல் ஆணையம் பதில் அளித்தபோது, விஜய் மக்கள் இயக்கத்திற்கு ஆட்டோ சின்னம் வழங்க முடியாது. தலைமை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்து இருந்தால்தான் ஆட்டோ சின்னம் ஒதுக்க முடியும். சுயேட்சை வேட்பாளர்களுக்கு சுழற்சி முறையிலேயே சின்னங்கள் ஒதுக்கப்படும் என்று பதிலளித்துள்ளது.