இங்கிலாந்தில் வசிக்கும் 83 வயது முதியவர் 70 வருடங்களாக மருத்துவ விடுப்பு எடுக்காமல் பணியாற்றி வந்திருக்கிறார்.
இங்கிலாந்தில் 83 வயது முதியவரான பிரெய்ன் சோர்லே, கடந்த 70 வருடங்களாக ஒரே நிறுவனத்தில் தான் வேலை செய்து கொண்டிருக்கிறார். பிரெய்ன், கடந்த 1953-ஆம் வருடத்தில், 15 வயது சிறுவனாக இருந்தபோது, சோமர்செட் பகுதியில் இருக்கும், ஷூ நிறுவனம் ஒன்றில் பகுதி நேரமாக பணிக்கு சேர்ந்திருக்கிறார்.
வாரத்திற்கு சுமார் 45 மணி நேரங்கள் பணியாற்றும் இவருக்கு, 2 பவுண்டு ஊதியம் வழங்கப்பட்டது. குடும்பம் வறுமையில் வாடியதால், வேறு வழியின்றி அங்கேயே முழுநேர வேலை பார்த்திருக்கிறார். அதன் பின்பு அந்த நிறுவனம் கடந்த 1993ஆம் வருடத்தில் ஷாப்பிங் மாலாக மாற்றப்பட்டது.
அதன்பின்பு, அங்கு பணியாற்றி வந்திருக்கிறார். சுமார் 8 வருடங்களுக்கு முன் அவரின் மனைவி மாயமானார். எனவே, வீட்டில் தனியாக இருப்பதற்கு பிடிக்காததால், 83 வயதான பிறகும் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார். இதில் ஆச்சரியமாக, அவர் 70 வருடங்களாக ஒருநாள் கூட எந்த காரணங்களுக்காகவும் விடுப்பு எடுத்தது இல்லையாம்.