தமிழக அரசு பள்ளிகளில் படித்து 7.5 சதவீத உள்ஒதுக்கீட்டில் மருத்துவ இடங்கள் பெற்ற மாணவர்களுக்கு கல்விக் கட்டணம், விடுதி வசதிகள், உணவு அனைத்தும் இலவசமாக வழங்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் நிகழாண்டு முதல் மருத்துவ இடங்கள் பெற்ற அனைத்து அரசு பள்ளி மாணவர்களுக்கும் இலவச கையடக்க கணினி (டேப்லெட்) வழங்கப்பட இருக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிந்த பிறகு முதல்வர் முக.ஸ்டாலின் மாணவர்களுக்கு கையடக்க கணினியை வழங்குவார் என்று கூறப்படுகிறது.
Categories