Categories
அரசியல் மாநில செய்திகள்

சீ…சீ…. இவ்வளவுதானா ? இது கேவலம் இல்லையா ? வெகுண்டெழுந்த ஜெயக்குமார்

திமுக நடத்திய பேரணி திமுகவிற்கு ஏற்பட்ட மிகப்பெரிய கேவலம் என்று அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று குடியுரிமை சட்டதிருத்தத்திற்கு எதிராக  திமுக தலைமையில் கூட்டணி கட்சி சார்பில் சென்னை எழும்பூரில் பேரணி நடைபெற்றது. இதில் கூட்டணி கட்சி , மாணவர் அமைப்பு , ஆசிரியர் அமைப்பு , நடிகர்கள் என அனைவரும் பங்கேற்க வேண்டுமென்று திமுக தலைவர் முக.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இன்று திமுக பேரணி குறித்து அமைச்சர் ஜெயக்குமார் தெரிவிக்கையில் , திமுக நடத்திய பேரணியில்  108 அமைப்புகளுக்கு அழைப்பு விடுத்தும் 5000 பேருக்கு மேல் கூட்டம் கூடவில்லை.

பேரணிக்கு வந்தவர்களின் எண்ணிக்கை காவல்துறையினரின் கூட்டத்தைவிட குறைவு என்று விமர்சித்த அமைச்சர் , வெறும் 5000 பேர் மட்டுமே பேரணியில் கலந்து கொண்டதால் இது  திமுகவிற்கு மிகப்பெரிய கேவலம் என்றும் தெரிவித்தார்.மேலும் பெரியார் குறித்து பாஜகவின் அதிகாரப்பூர்வ ட்விட்டரில் போடப்பட்ட பதிவு குறித்த கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், சமூக சீர்திருத்தவாதி பெரியாரை கொச்சைப் படுத்தியது தவறு என்றும்,  இது கண்டத்திற்குரிய செயல் என்றும் தெரிவித்தார்.

Categories

Tech |