பாகிஸ்தானில் 14 வயது சிறுவன் ஒருவன் பப்ஜி விளையாட கூடாது என்று திட்டியதால் தனது மொத்த குடும்பத்தையும் கைத்துப்பாக்கியை கொண்டு சுட்டுக் கொன்ற சம்பவம் அரங்கேறியுள்ளது.
பாகிஸ்தானிலுள்ள லாகூரில் 45 வயதாகும் நஹீத் முபாரக் என்ற பெண்மணி ஒருவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது 14 வயது மகனை பப்ஜி விளையாட கூடாது என்று அடிக்கடி திட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் அந்த சிறுவன் பப்ஜி விளையாட கூடாது என்று திட்டிய ஆத்திரத்தில் தூங்கிக் கொண்டிருந்த தனது தாய், சகோதரர் மற்றும் இரு தங்கைகளை வீட்டிலிருந்த கைத்துப்பாக்கியை கொண்டு சுட்டு தள்ளியுள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறை அதிகாரிகள் காயமின்றி காணப்பட்ட அந்த சிறுவனை விசாரணை செய்யும் போது இந்த அதிர்ச்சிகர உண்மை வெளிவந்துள்ளது. இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.