சினிமா திரையுலகில் சாதனை படைத்த சவுக்கார் ஜானகி அம்மாவுக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ விருது வழங்கியுள்ளது. இதைப் பாராட்டி தமிழ் நடிகர் நடிகைகள் சார்பில் நாசர் அவர்கள் சவுக்கார் ஜானகி அம்மாவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.
சவுக்கார் ஜானகி அவர்கள் தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் சாதனை படைத்து வரலாற்றுப் புகழ்மிக்க நடிகையாக விளங்கியவர். இவர் தெலுங்கு மொழியில் சவுக்கார் என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானதால் தான் இவருக்கு சவுக்கார் ஜானகி என்ற பெயர் வந்தது. இவர் ஏராளமான படகளில் நடித்து தனது திறமைகளை வெளிக்காட்டி அனைவரிடமும் பாராட்டை பெற்றவர். இவருக்கு ஜனவரி 26 குடியரசு தின விழாவில் பத்மஸ்ரீ விருது வாங்கப்பட்டது. இதனால் நடிகர், நடிகைகள் சார்பில் நடிகர் நாசர் அவர்கள் சவுக்கார் ஜானகி அம்மாவை வாழ்த்தும் வகையில்,
“ஓ எங்கள் ‘சவுக்கார்’ அம்மா.. அத்தனை மொழிகளிலும் மறக்கமுடியாத எத்தனை நூறு படங்கள்! ஒவ்வொன்றும் முத்தாய்! ஒன்றில் கண்டது.. இன்னொன்றில் இல்லை. புதிது புதிதாய் கண்டு ரசிக்க கண்கோடி! ‘புதிய பறவையில்’ மிரட்டியதும் மிரண்டுபோனது ஒரு ஜோடிகண்களா? ஆச்சரியம்! கண்களை மிஞ்சும் உங்கள் முத்துசிரிப்பு! அச்சிரிப்பினும் வழிந்தோடும் உண்மையான உங்கள் அன்பும் பாசமும்!! தாங்கள் எங்களுக்கு தந்த கதாபாத்திரங்கள் ஒவ்வொன்றையும் முத்தாய் கோர்த்து அழகு பார்த்து மனமகிழ்ந்து விம்மிய எங்களுக்கு அம் முத்துமாலைக்கு பதக்கமாய் இன்று “பத்மஸ்ரீ” உங்களுக்கு கிடைத்திருப்பது எங்களுக்கு பெருமை. தமிழ் திரையுலகிற்கு கிடைத்த கொடை நீங்கள், என்றென்றும் நீடூடி வாழ நடிகர், நடிகைகள் சமூகம் சார்பில் வாழ்த்தி வணங்குகிறோம். “பத்மஸ்ரீ” விருது அறிவித்த ஒன்றிய அரசுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளார்.