சிக்கன் சாண்ட்விச்
தேவையான பொருட்கள் :
ப்ரெட் ஸ்லைஸஸ் -8
வெங்காயம்- 2 (நறுக்கியது)
தக்காளி -2
பச்சை மிளகாய்-2
வேக வைத்த சிக்கன -6 துண்டுகள்
உப்பு -தேவைக்கேற்ப
கொத்தமல்லி -இலைசிறிதளவு
வெண்ணெய் -தேவைக்கேற்ப
எண்ணெய்-தேவைக்கேற்ப
செய்முறை :
சிக்கன் சாண்ட்விச்செய்வதற்கு முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் நறுக்கிய வெங்காயம், உப்பு, பொடியாக நறுக்கிய தக்காளி ஆகியவற்றை சேர்த்து வதக்கவும்.அவை நன்கு வதங்கியதும், அதனுடன் எலும்பு நீக்கிய வேக வைத்த சிக்கன் துண்டுகள் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்துப் பிரட்டி, கொத்தமல்லி இலைகளை தூவி இறக்கவும். பிறகு ஒரு ப்ரெட் துண்டின் மீது பட்டர் தடவி, சிக்கன் கலவையை வைக்கவும். அதனை மற்றொரு ப்ரெட்டினால் மூடி டோஸ்ட் செய்து எடுக்கவும்.
இப்பொது ருசியான சிக்கன் சாண்ட்விச் ரெடி.