Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள்…. எதிர்பாராமல் நடந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

கட்டிட சுவர் இடிந்து விழுந்து 2 மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் மாவட்டத்திலுள்ள எஸ்.புதூர் வண்டிக்குப்பம் பகுதியில் கடந்த 2013-ஆம் வருடம் இலங்கை அகதிகளுக்காக 130 தொகுப்பு வீடுகள் கட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்த வீடுகளில் இலங்கை அகதிகள் எவரும் வசிக்கவில்லை. இந்நிலையில் தொண்டு நிறுவனங்கள் மூலமாக கட்டப்பட்ட இந்த வீடுகள் தற்போது மிகவும் சேதமடைந்து காணப்பட்டுள்ளது. இதில் பெரும்பாலான வீடுகள் இடிந்து விழுந்து கிடந்துள்ளது.

இதனையடுத்து அரசு மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படிக்கும் புவனேஸ்வரன், வீரசேகர் மற்றும் சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் அங்கிருக்கும் பழைய கட்டிடத்தில் அமர்ந்து பேசி விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது அந்த கட்டிடம் திடீரென இடிந்து விழுந்து அவர்கள் 3 பேரும் கட்டிட இடிபாட்டில் சிக்கி கொண்டனர். இதனைப் பார்த்த அருகிலிருந்தவர்கள் ஓடி சென்று 3 பேரையும் மீட்க முயற்சி செய்தும் முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பின்னர் அவர்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கிய 3 மாணவர்களில் 2 பேரை சடலமாகவும், ஒருவரை உயிருக்கு போராடிய நிலையிலும் மீட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்த புவனேஸ்வரனை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அங்கு அவருக்கு மருத்துவர்களால் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. பின்னர் உயிரிழந்த 2 மாணவர்களின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |