தலைநகர் டெல்லியில் சிறுமியை கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 9 பெண்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இருவர் 18 வயது நிரம்பாத சிறுவர்கள் என்று கூறப்படுகிறது. இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக காவல்துறையினர் கூறியபோது, கடந்த 2 நாட்களுக்கு முன்பு டெல்லியில் ஷத்ராவில் ஒரு கும்பல் அந்த சிறுமியை தாக்கியது. மேலும் பாதிக்கப்பட்ட சிறுமி மீது கரி எண்ணெய் ஊற்றி செருப்பு மாலை அணிவித்து நகர மையத்தில் நடத்திச் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதனிடையில் டெல்லி மகளிர் ஆணையத்தின் தலைவி ஸ்வாதி மாலிவால் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த சித்திரவதை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர் அப்பகுதியில் மதுபான மாஃபியாவின் தலைவராவார். இவரது மகன் கடந்த வருடம் தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமாக இருந்த சிறுமியை தற்போது அந்த கும்பல் தண்டித்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.