தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான யோகி பாபு நடிக்கும் “பன்னிக்குட்டி” திரைப்படத்தின் பாடல் புரோமோ இணையத்தில் வெளியாகியுள்ளது.
தமிழ் திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும் அவ்வபோது கதாநாயகனாகவும் நடித்து வருகிறார் நடிகர் யோகி பாபு. அவர் விஜயுடன் “பீஸ்ட்”, அஜித்துடன் “வலிமை”, சிவகார்த்திகேயனுடன் “அயலான்”, விஷாலுடன் “வீரமே வாகை சூடும்” விஜய்சேதுபதியுடன் “கடைசி விவசாயி” முதலான திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்து வருகிறார். இந்த வரிசையில் யோகிபாபு தற்போது கதாநாயகனாக “பன்னிக்குட்டி” என்னும் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்தை இயக்குனர் அனுசரண் முருகையன் இயக்குகிறார். முக்கிய வேடங்களில் யோகி பாபு, கருணாகரன் சேர்ந்து நடித்துள்ளார்கள். மேலும் திண்டுக்கல் ஐ.லியோனி, சிங்கம்புலி, ராமர், டைகர் கார்டன் தங்கதுரை என பலரும் இணைந்து நடித்துள்ளனர். லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் வெளியாகவிருக்கும் பன்னிகுட்டி படத்திற்கு கிருஷ்ண குமார் இசையமைத்துள்ளார். படத்திற்கு சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தற்பொழுது “பன்னிக்குட்டி” படத்தின் பாடல் புரோமோ இணையத்தில் வெளியாகி இருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் இது பெரிதும் கவரப்பட்டுள்ளது.