புதிய இணையதள முகவரியை துணை வேந்தர் ஆர்.எம். கதிரேசன் தொடங்கி வைத்துள்ளார்.
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் இணைக்கப்பட்டிருக்கும் இணைப்பு கல்லூரிகளுக்கான புதிதாக இணையதளம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த பல்கலைக்கழகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பதிவாளர் சீதாராமன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பிரகாஷ் மற்றும் கல்லூரி வளர்ச்சி கவுன்சில் முதல்வர் வசந்தராணி ஆகியோர் முன்னிலையில் துணைவேந்தர் ஆர்.எம். கதிரேசன் புதிய இணையதள முகவரியான www.aucoeexam.in என்பதை தொடங்கி வைத்துள்ளார்.
இதனையடுத்து இந்த புதிய இணையதளத்தை தேர்வுத்துறை தொழில்நுட்ப அலுவலர்கள் அருணாராணி, விக்ரம நாராயணன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் உருவாக்கியுள்ளனர். பின்னர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தின் கீழுள்ள கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இருக்கும் 75 இணைப்பு கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு இந்த இணையதளம் பெரிதும் துணை புரியும்.
இதன் மூலமாக உறுப்புக் கல்லூரிகள் தகவல்களை பதிவேற்றம் செய்யவும், செய்முறை மதிப்பெண்களுக்கான உரிய படிவத்தை சமர்ப்பிக்கவும், தேர்வு அனுமதிச் சீட்டு பெறவும் மற்றும் தேர்வு முடிவுகள் தெரிந்து கொள்ளவும் இவை உதவிகரமாக இருக்கும். இதனைத் தொடர்ந்து இந்த புதிய இணையத்தளம் இணைய வழியில் தேர்வுகள் நடத்தவும் பயனுள்ளதாக இருக்கும் என அண்ணாமலைப் பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.