சென்னை கிண்டியில் உள்ள பிரபல சங்கீதா ஹோட்டல் கழிப்பறையில் செல்போனை மறைத்து வைத்து வீடியோ எடுத்த சம்பவம் வாடிக்கையாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கண்ணன் என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதற்கிடையே மற்றொரு கழிப்பறையில் உள்ள அட்டை பெட்டியை அங்கு வேலை பார்க்கும் ஊழியர்கள் அவசர அவசரமாக எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.