நாடு முழுவதும் தற்போது பரவி வரும் கொரோனா நோய் தொற்றுக்கு மத்தியில் பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) உறுப்பினர்களுக்கு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. அந்த அடிப்படையில் கொரோனா சிகிச்சைக்கான பணத்தை EPFO உறுப்பினர்கள் முன்கூட்டியே பெறுவதற்கான வசதிகளை EPFO அமைப்பு வழங்குகிறது. இதனால் பயனர்கள் முன்கூட்டியே கோரிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
அந்த அடிப்படையில் தற்போது கொரோனா தொற்று நோய் சிகிச்சைக்கான முன்பணத்தைப் பெறுவதற்கான வசதியை பயனர்கள் epfindia.gov.in என்ற இணையதளம் மூலமாக பெற்றுக்கொள்ளலாம். இது குறித்து ஏதாவது கேள்விகள் மற்றும் சந்தேகங்கள் இருந்தால் ஆர்வமுள்ள நபர்கள் EPFO இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலமாக தெரிந்து கொள்ளலாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. தற்போது கொரோனா சிகிச்சைக்கான முன்பணம் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் என்பதை பயனர்கள் அறிந்துகொள்ள வேண்டும். இதற்கான தகுதி, திரும்பப் பெறுதல் ஆகிய விபரங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
தகுதி
EPF திட்டத்தில் 1952ல் UAN உடன் பணிபுரியும் மற்றும் ஏதேனும் ஒரு நிறுவனத்தில் அல்லது தொழிற்சாலையில் பணிபுரிந்து, EPF மற்றும் MP சட்டம், 1952 இன் கீழுள்ள ஒவ்வொரு பணியாளர்களும் கொரோனா முன்பணம் பெறும் திட்டத்திற்குத் தகுதியுடையவர்கள் ஆவார்கள் .
UMANG செயலி மூலமாக கொரோனா முன்பணத்தை தாக்கல் செய்ய
# ஆர்வமுள்ள நபர்கள் UMANG செயலி மூலமாக கோவிட்-19 உரிமைகோரலைப் பதிவு செய்யலாம்.
# UMANG செயலியை ஓபன் செய்ய வேண்டும்
# அவற்றில் EPFO சேவையை தேர்வு செய்ய வேண்டும்
# இதையடுத்து Request for Advance (COVID-19) என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுக்க வேண்டும்.
# இப்போது UAN விவரங்களை உள்ளிட்டு, ‘Get OTP’ என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
#பின் OTP ஐ உள்ளிட்டு உள்நுழை என்பதைக் கிளிக் செய்யவும்.
# உள்நுழைந்த பின் EPFO உறுப்பினர் தனது வங்கிக் கணக்கின் கடைசி நான்கு இலக்கங்களை உள்ளிட வேண்டும்.
# அதுமட்டுமல்லாமல் மெனுவில் இருந்து உறுப்பினர் ஐடியைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
#அதன்பின் Click on proceed என்பதைக் கிளிக் செய்ய வேண்டும்
# முகவரியை உள்ளிட்டு Next என்பதை கொடுக்க வேண்டும்
#முடிவில் பயனர் காசோலை படத்தையும் அதில் அச்சிடப்பட்ட கணக்கு எண் மற்றும் பெயரையும் பதிவேற்ற வேண்டும்
# அனைத்து விவரங்களையும் உள்ளிட்ட பின் கோரிக்கை வெற்றிகரமாக தாக்கல் செய்யப்படும்.