Categories
சேலம் மாவட்ட செய்திகள்

மனைவியும் இல்ல, மகள்களும் இல்ல…. ஆம்புலன்ஸ் ஓட்டுநரின் விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

மனைவி இறந்த துக்கத்தில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்திலுள்ள ஆத்தூர் பகுதியில் ஆம்புலன்ஸ் ஓட்டுநரான ராஜா என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு தீபா என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 மகள்கள் இருக்கின்றனர். கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட தகராறு காரணமாக மன உளைச்சலில் இருந்த தீபா தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். அவரின் இறப்பிற்கு பிறகு அவரது 2 மகள்களையும் தீபாவின் பெற்றோர் அழைத்து சென்றதாக கூறப்படுகிறது. இதனால் எனக்கென யாரு இருக்கிறார்கள் என்றும், நான் வாழ விரும்பவில்லை என்றும் ராஜா தனது நண்பர்களிடம் புலம்பியுள்ளார்.

இந்நிலையில் மனைவி இறந்த துக்கம் மற்றும் மகள்களை பிரிந்த ஏக்கத்தில் இருந்த ராஜா தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ராஜாவின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |