Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

மலை ரயில் பாதையில் உலா வரும் யானை…. அச்சத்தில் ரயில்வே ஊழியர்கள்….!!

யானை தனது குட்டியுடன் மலை ரயில் பாதையில் சுற்றி திரிகிறது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பர்லியார் பகுதியில் கடந்த வாரம் குட்டியுடன் 5 காட்டு யானைகள் முகாமிட்டுள்ளது. அந்த கூட்டத்திலிருந்து பெண் காட்டு யானை தனது ஒரு மாத குட்டியுடன் பிரிந்தது. இந்நிலையில் குன்னூர்-மேட்டுப்பாளையம் மலை ரயில் பாதையில் ஹில்குரோவ்-ரன்னிமேடு இடையே காட்டு யானை தனது குட்டியுடன் சுற்றித் திரிகிறது.

இந்த காட்டு யானை குடிநீர் குழாய்களை உடைத்து சேதப்படுத்துவதால் ரயில்வே ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர். எனவே குட்டியுடன் சுற்றித்திரியும் காட்டு யானையை அடர்ந்த வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வனத்துறையினருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |