எண்ணெய் வளமிக்க வெனிசுலாவில் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
வெனிசுலா நாட்டில் விதிக்கப்பட்டுள்ள பொருளாதாரத் தடைகள் மற்றும் அங்கு ஏற்பட்டிருக்கும் நிர்வாக குளறுபடியால் பெட்ரோலுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. வெனிசுலாவில் ஒரு லிட்டர் பெட்ரோல் 1 ரூபாய் 64 பைசாவிற்கு விற்கப்படுகிறது. இதனால் பெட்ரோல் தட்டுப்பாடு ஏற்பட்டு கொலம்பியாவில் இருந்து பெட்ரோல் கடத்திவரப்பட்டு விற்கப்படுகிறது.
மேலும் மக்கள் பெட்ரோல் பங்குகளில் காத்திருந்து பெட்ரோல் வாங்க வேண்டிய அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு நபருக்கும் குறித்த அளவுதான் பெட்ரோல் விற்க வேண்டும் என்று அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இதனால் லாரி மற்றும் டாக்ஸி ஓட்டுனர்கள் கொலம்பியாவில் இருந்து கடத்திவரப்படும் பெட்ரோலை கள்ள சந்தைகளில் வாங்கி செல்கிறார்கள். குறிப்பாக உலகின் மிகக் குறைந்த விலையில் பெட்ரோல் விற்கப்படும் நாடான வெனிசுலாவிலிருந்து கடந்த சில ஆண்டுகளாக பெட்ரோல் கடத்தப்பட்டு வந்து கொலம்பியாவில் விற்கப்பட்டது. ஆனால் தற்போது அதன் நிலைமை தலைகீழாக மாறியுள்ளது.