Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

சமைப்பதற்காக சென்ற வேலைக்கார பெண்…. உரிமையாளர் அளித்த புகார்…. போலீசாரின் அதிரடி நடவடிக்கை…!!

அழகு நிலைய பெண் உரிமையாளர் வீட்டில் திருடிய குற்றத்திற்காக தம்பதியினரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ராயக்கோட்டை பகுதியில் நதியா என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் அழகு நிலையம் நடத்தி வருகிறார். இந்த கடையில் தர்மபுரியை சேர்ந்த பவானி என்ற பெண் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் பவானி “வீட்டிற்கு போய் நான் சமைத்து வைக்கிறேன்” என நதியாவிடம் கூறியுள்ளார். இதனால் நதியா தனது வீட்டு சாவியை பவானியிடம் கொடுத்து அனுப்பியுள்ளார். இதனை அடுத்து வீட்டிற்கு சென்ற நதியா பீரோவில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், 25 ரூபாய் பணம் ஆகியவை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து நதியா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சமைத்து வைப்பதாக கூறி விட்டு வீட்டிற்கு சென்ற பவானி தனது கணவருடன் இணைந்து நகை மற்றும் பணத்தை திருடி சென்றது தெரியவந்துள்ளது. இதனை அடுத்து பவானி மற்றும் அவரது கணவர் பாண்டியன் ஆகிய இருவரையும் காவல்துறையினர் கைது செய்து, நகை மற்றும் பணத்தை மீட்டனர்.

Categories

Tech |