Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

மோட்டார் சைக்கிள்-வேன் மோதல்…. தலை நசுங்கி பலியான ஆயுதப்படை போலீஸ்காரர்…. கிருஷ்ணகிரியில் கோர விபத்து…!!

மோட்டார் சைக்கிள் மீது வேன் மோதிய விபத்தில் ஆயுதப்படை போலீஸ்காரர் தலை நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள மயிம்பட்டி பகுதியில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் ஆயுதப்படையில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 8 மாதங்களுக்கு முன்பு சதீஷ்குமாருக்கு ஒரு பெண்ணுடன் திருமணம் நடைபெற்றுள்ளது. இந்நிலையில் பணி முடிந்த பிறகு சதீஷ்குமார் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு புறப்பட்டுள்ளார். இவர் தளிஅள்ளி பகுதியில் சென்று கொண்டிருந்த போது அவ்வழியாக வேகமாக வந்த வேன் சதீஷ்குமாரின் மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இதனால் நிலைதடுமாறி கீழே விழுந்த சதீஷ்குமாரின் மீது வேனின் சக்கரம் ஏறி இறங்கியதால் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சதீஷ்குமாரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |