தமிழகத்தில் கொரோனா காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் ஜனவரி 31-ஆம் தேதி வரை மூடப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது. அதனால் மாணவர்களுக்கு நடைபெற இருந்த தேர்வுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு குறைந்துள்ள நிலையில் பிப்ரவரி 1 முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் வழக்கம் போல் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் பள்ளிகளில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடக்குமா அல்லது மீண்டும் 100 சதவீத மாணவர்களுக்கான வகுப்புகள் நடக்குமா என்று மாணவர்கள், பெற்றோர்களிடையே குழப்பம் நிலவியது. இந்த நிலையில் சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்படாது என்றும் 100 சதவீத மாணவர்கள் பள்ளிக்கு வர வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.