Categories
ஆன்மிகம் ராசிபலன் ஜோதிடம்

ரிஷப இராசிக்கு…”பிள்ளைகளின் ஆசையை பூர்த்தி செய்வீர்”…. மன இறுக்கம் நீங்கும்….!!!

ரிஷப ராசி அன்பர்களே…!!  இன்று நம்பிக்கைகள் நடைபெறும் நாளாக இருக்கும். கல்யாண கனவுகள் நனவாகும். பணியாட்கள் தொல்லை அகலும். சிக்கலான சில காரியங்களைக் கூட சீக்கிரத்தில் முடித்துக் காட்டுவீர்கள். இன்று பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். வேலைப்பளு, வீண் அலைச்சல் இருக்கும். உடல் ஆரோக்கியம் சீராகவே இருக்கும். மனதில் இருந்த இறுக்கம் நீங்கும்.

குடும்பத்தில் இருந்த சின்ன சின்ன பிரச்சனைகள் சரியாகும். இன்று கலகலப்பான சூழலும் காணப்படும். பொருளாதாரம் உயரும். பொருள் சேர்க்கை ஏற்படும். உங்களுடைய வார்த்தைக்கு மற்றவர்கள் மதிப்பு கொடுப்பார்கள். இன்று கணவன் மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அனைவரின் ஆதரவும் கிடைக்கும்.

இன்று நீங்கள் முக்கியமான பணியை மேற்கொள்ளும் பொழுது, சிவப்பு நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். சிவப்பு நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தைச் செய்யுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.

இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : வடக்கு

அதிஷ்ட எண் : 3 மற்றும் 5

அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு மற்றும் நீல நிறம்

Categories

Tech |