தமிழகத்தில் கொரோனா பாதிப்பு ஓரளவு குறைந்துள்ள நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் 1-12ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்கள் பள்ளிக்கு வருவது கட்டாயம் கிடையாது என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், பள்ளி வகுப்புகள் நேரடி அல்லது ஆன்லைன் முறையில் நடத்தப்படும். ஆகவே எந்த முறையில் வகுப்புகளை நடத்துவது என்று அந்தந்த பள்ளிகளே முடிவு செய்யலாம். நேரடி வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் கட்டாயம் பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றுவதை பள்ளி நிர்வாகம் உறுதிசெய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.