Categories
மாநில செய்திகள்

பிப்.1 முதல் ரயில் பயணிகளுக்கு…. வெளியான செம ஹேப்பி நியூஸ்….!!!!

தமிழகத்தில் அதிகரித்து வந்த தொற்று பாதிப்பு தற்போது படிப்படியாக குறைய தொடங்கியுள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஊரடங்கை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. அதன்படி கட்டுப்பாடுகளில் தளர்வுகளும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை புறநகர் ரயிலில் பயணிப்பவர்கள் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் 2 டோஸ் தடுப்பூசி பெற்றதற்கான சான்றிதழை சமர்ப்பிக்க தேவையில்லை என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேலும் யூடிஎஸ் செயலி மூலம் ரயில் பயணத்திற்கான டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம். சீசன் டிக்கெட் வாங்குவதற்கும் தடுப்பூசி சான்றிதழ் தேவை இல்லை. ஆனால் புறநகர் ரயிலில் வழக்கம் போல் மாஸ்க் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |