4 வயது சிறுவனை அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தில் உள்ள கீழக்கொல்லை பகுதியில் கார் ஓட்டுனராக செந்தில்நாதன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அஸ்வின் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் அஸ்வின் திடீரென காணாமல் போயுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடி பார்த்துள்ளனர். ஆனால் எங்கும் கிடைக்காததால் காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். அந்தப் புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அதே பகுதியில் வசிக்கும் இளம்பெண் ரஞ்சிதா என்பவர் அஸ்வினை அழைத்து சென்றதாக தெரியவந்துள்ளது. இதனை தெரிந்த உறவினர்கள் மற்றும் காவல்துறையினர் கிராமம் முழுவதும் அவரை தேடியுள்ளனர். பின்னர் அவர் கிடைக்காத கோபத்தில் உறவினர்கள் சாலையில் திடீரென மறியலில் ஈடுபட்டுள்ளனர். இதனை அறிந்த காவல்துறை சூப்பிரண்டு சபியுல்லா சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி சிறுவனை தேடுதல் வேட்டையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். அப்போது அதே பகுதியில் இருக்கும் முந்திரி தோப்பில் அஸ்வின் சடலமாக கிடந்துள்ளார்.
இதனை அறிந்த காவல்துறையினர் மற்றும் பெற்றோர் அங்கு விரைந்து சென்றுள்ளனர். பிறகு சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதுள்ளனர். இதனையடுத்து சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனைத்தொடர்ந்து முதற்கட்ட விசாரணையில் சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. ஆதலால் சிறுவனை கொலை செய்தவர்கள் யார் எங்கு இருக்கிறார் என்பது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சிறுவனை அழைத்து சென்ற ரஞ்சிதா என்ற இளம்பெண்ணை காவல்துறையினர் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.