மேற்கிந்திய அணி இங்கிலாந்திற்கு சுற்றுப்பயணம் செய்து ஐந்து டீ20 மற்றும் 3 டெஸ்டில் விளையாடுகிறது . டி20 தொடர் ஜனவரி 23 தொடங்கி ஜனவரி 31 வரை நடைபெற இருக்கிறது. இதேபோல் டெஸ்ட் தொடர் மார்ச் 8ஆம் தேதி தொடங்கி 28 ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் 3-வது டெஸ்ட் தொடரில் ஓடியன் ஸ்மித் இடம்பெறாததால் அணி வீரர்களிடையே கருத்து மோதல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஐந்து ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் முதல் இரண்டு ஆட்டங்களில் ஒடியன் ஸ்மித் விளையாடினார்.
இரண்டாவது டி-20 ஆட்டத்தில் பேட்டிங்கை வலுப்படுத்துவதற்காக ஓடியன் ஸ்மித்தை நீக்கிவிட்டு அந்த ஆட்டத்தில் ரோவ் பாவளை சேர்த்தனர். இதுதொடர்பாக மேற்கிந்திய அணியின் பயிற்சியாளர் பில் சிம்மன்ஸ் கூறியதாவது, “இதுதொடர்பாக யாரையும் கீழே தள்ள உதாசீனம் செய்ய நாங்கள் விரும்பவில்லை. நான் இருக்கும் வரை அது நடக்காது. இந்த விவகாரம் தொடர்பாக பரவிவரும் முட்டாள் தனமான கருத்துக்களை முதலில் நிறுத்த வேண்டும். அணியில் ஓடியன் இடம் பிடிக்கவில்லை என்றால் அதற்காக சர்ச்சையான கருத்துக்களை கூறுவதா.? யார் நன்றாக விளையாடுவார்கள் அணியில் இடம் பிடிப்பார்கள். கிரிக்கெட்டில் யாரையும் பாதிப்புக்கு ஆளாக்க மாட்டோம்.” இவ்வாறு அவர் கூறினார்.