மிதுன ராசி அன்பர்களே…!! இன்று இன்பங்கள் வந்து சேர இறைவனை வழிபட வேண்டிய நாளக இருக்கும். எதிர்பார்த்தபடியே வருமானம் சிறப்பாக இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும். நண்பர்கள் உதவிகரமாக இருப்பார்கள். வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். அதுமட்டுமில்லாமல், இன்று புதியதாக வாகனம் வாங்க கூடிய யோகமும் இருக்கு. உங்களுடைய உடலில் வசீகரத் தன்மை கூடும்.காதல் வயப்பட கூடிய சூழலும் இருக்கு. இன்று எதிர்ப்புகள் விலகி செல்லும். எதிலும் சில விஷயங்களை மேற்கொள்ளும் பொழுது எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.
இன்று வீடு மாற்றம், இடமாற்றம் போன்றவை நடைபெறக்கூடும். செலவு கொஞ்சம் அதிகமாகத்தான் இருக்கும். மனதில் ஏதாவது கவலை இருந்து கொண்டே இருக்கும். இன்று வாகனத்தில் செல்லும் பொழுது, தீ மற்றும் ஆயுதங்கள் போன்றவற்றை கையாளும் பொழுது கவனமாக கையாளுங்கள். இன்று குடும்பத்தை பொறுத்த வரை எந்தவித பிரச்சனையும் இல்லை. சுமுகமாகவே இருக்கும். பழைய பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். அதே போல கடன்கள் மட்டும் இன்று வாங்க வேண்டாம்.
இன்று மாணவர்கள் கல்விக்காக கடுமையாக உழைப்பீர்கள். கல்வியில் ஆர்வம் மிகுந்து காணப்படும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, இளம்பச்சை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். இளம் பச்சை நிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அது மட்டுமில்லாமல் இன்று சிவ பெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் இளம் பச்சை நிறம்