இந்திய அணி கிரிக்கெட் வீரர் தனது பாட்டியுடன் புஷ்பா பட பாடலுக்கு நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
அல்லு அர்ஜுன் ராஷ்மிகா நடிப்பில் வெளியான புஷ்பா திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சனங்கள் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்கள் மிகவும் ட்ரெண்டிங் ஆனது. பிரபலங்கள் பலரும் இப்படத்தில் இடம் பெற்றுள்ள பாடல்களுக்கு நடனமாடி சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தனர்.
அந்த வகையில் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் அல்லு அர்ஜுன் போல் நடனமாடி வெளியிட்டிருந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. இந்நிலையில் புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஸ்ரீ வள்ளி என்னும் பாடலுக்கு இந்திய அணியின் பிரபல கிரிக்கெட் வீரரான ஹர்திக் பாண்டியா தனது பாட்டியுடன் சேர்ந்து நடனம் ஆடியுள்ளார். இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
https://www.instagram.com/p/CZL7EjEl2cL/