கடக ராசி அன்பர்களே…!!! இன்று ஆலய வழிபாட்டால் அமைதி காணும் நாளாக இருக்கும். உங்களுடைய சாமர்த்தியமான பேச்சு அனைவரையும் கவரும் விதமாகவும் இருக்கும். காரியங்களை சாதித்துக் காட்டும் வகையில் சூழ்நிலையும் இருக்கும். செய் தொழிலில் லாபம் கூடும். செல்வாக்கு உயர வழி வகுத்துக் கொள்வீர்கள். இன்று பொருள் சேர்க்கை ஏற்படும். அதேபோல் மாணவர்கள் வாகனத்தில் செல்லும் பொழுது ரொம்ப கவனமாக செல்லவும்.
எச்சரிக்கையாக இருப்பது எப்போதுமே நல்லது. பாடங்களை படிக்கும்போது திட்டமிட்டு படியுங்கள், அப்போது தான் வெற்றிக்கு வழிவகுக்க முடியும். ஆசிரியர்களிடமிருந்து உங்களுக்கு நல்ல உறவு கிடைக்கும். குடும்பத்தை பொறுத்த வரை எந்தவித பிரச்சினையும் இல்லை. சிறப்பாக இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். கொடுக்கல் வாங்கல் விஷயங்களில் மட்டும் கொஞ்சம் கவனமாக இருங்கள். யாரிடமும் இன்று கடன்களை வாங்காதீர்கள்.
வெளியூர் பயணம் சிறப்பை கொடுக்கும், புதிய அனுபவத்தை கொடுக்கும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, நீல நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். நீலநிறம் உங்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தை மேற்கொள்ளுங்கள். அனைத்து காரியம் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : தெற்கு
அதிஷ்ட எண் : 1 மற்றும் 2
அதிர்ஷ்ட நிறம் : நீலம் மற்றும் இளம் பச்சை நிறம்