Categories
சென்னை மாவட்ட செய்திகள்

அயனாவரத்தில் கஞ்சா விற்பனை செய்த மூவர் கைது..!!

அயனாவரத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட இரண்டு திருநங்கைகள் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சென்னை அயனாவரம் ஐ.சி.எஃப் பகுதிகளில் கஞ்சா விற்பனை நடைபெற்றுவருவதாக காவல் துறைக்கு தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் காவலர்கள் நடத்திய தேடுதல் வேட்டையில் அயனாவரத்தைச் சேர்ந்த சஞ்சனா (28), கீதா (19) ஆகிய இரு திருநங்கைகளும், புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஆனந்தவள்ளி என்ற பெண்ணும் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து மூவரையும் கைது செய்த காவல் துறையினர், அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவையும், 65 ஆயிரம் ரூபாய் பணத்தையும் பறிமுதல் செய்தனர். மேலும், சஞ்சனா, கீதா ஆகிய இரு திருநங்கைகளும் கடந்த மாதம் வடபழனியில் 30 ஆயிரத்தை வழிப்பறி செய்து விட்டு, வடபழனி காவல்துறையால் தேடப்படும் குற்றவாளிகளாக இருந்தவர்கள் என்பது விசாரணையில் தெரியவந்தது. பின்னர், அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மூவரையும் சிறையில் அடைத்தனர்.

Categories

Tech |