Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பிரசித்தி பெற்ற கோவில்கள்…. நடைபெற்ற சிறப்பு பூஜைகள்…. குவிந்த பக்தர்கள் கூட்டம்…!!

வெள்ளிக்கிழமையை முன்னிட்டு பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி கோவில்களான அடைக்கலம் காத்த அய்யனார் கோவில், பத்திரகாளி அம்மன் கோவில், முத்துமாரியம்மன் கோவில், காளியம்மன் கோவில், உள்ளிட்ட பல கோவில்களில் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இந்நிலையில் அம்மனுக்கு  அபிஷேகம் செய்யப்பட்டு  சிறப்பு பூஜைகள் நடைபெற்றுள்ளது. இதில் ராமநாதபுரம், மதுரை. சிவகங்கை .உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்தும் முககவசம் அணிந்தும்  வரிசையில் நின்று  சாமியை  தரிசனம் செய்துள்ளனர்.

Categories

Tech |