Categories
அரசியல்

மாநகராட்சி பணியாளரை தாக்கிய எம்.எல்.ஏ கே.பி சங்கர்…. காவல்துறையினரிடம் புகார்…!!!

மாநகராட்சி பணியாளரை தாக்கிய எம்.எல்.ஏ கேபி சங்கர் மீது சென்னை மாநகராட்சி சார்பாக  காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக பாதிப்படைந்த சாலைகளை சீரமைக்க முதல்வர் மு.க ஸ்டாலின் உத்தரவிட்டார். அதன்படி கடந்த வியாழக்கிழமை அன்று திருவெற்றியூர் நடராஜன் கார்டன் வீதியில் அதிகாலையில் சாலை சீரமைக்கும் பணிகள் நடந்தது.

அப்போது திருவொற்றியூர் தொகுதியின் எம்எல்ஏ கே.பி சங்கரும் அவரின் ஆதரவாளர்களும் சாலை சீரமைப்பு பணியை தடுத்து நிறுத்தினர். மேலும், பிரச்சனையை தீர்ப்பதற்கு தடுக்க முயற்சித்த மாநகராட்சி உதவி என்ஜினீயரை தாக்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, திமுகவில் எம்எல்ஏ ஷங்கரின் பதவி பறிக்கப்பட்டது. இந்நிலையில் மாநகராட்சி பணியாளரை தாக்கியதற்காக சென்னை மாநகராட்சி சார்பாக எம்எல்ஏ சங்கர் மீது காவல்துறையினரிடம் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |