நடிகர் விக்ரமும் துருவ் விக்ரமும் சேர்ந்து நடிக்கும் “மகான்” திரைப்படத்தின் கதாப்பாத்திர போஸ்டர்கள் இணையதளத்தில் வெளியாகியுள்ளது.
“மகான்” திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் அவருடைய மகனுமான நடிகர் துருவ் விக்ரமும் இணைந்து நடித்திருக்கின்றனர். இருவரும் இணைந்து நடித்திருப்பதால் ரசிகர்களுக்கு இடையே ஆவல் அதிகமாக உள்ளது. இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார். மேலும் இத்திரைப்படத்தில் சிம்ரன், வாணி போஜன் மற்றும் பாபி சிம்ஹா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். மகான் படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பாக லலித் தயாரித்து உள்ளார். இந்தப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்துள்ளார்.
மகான் படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ள நிலையில் பின்னணி பணிகள் மிக வேகமாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. திரைப்படம் வருகின்ற 10ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனைத்தொடர்ந்து இத்திரைப்படத்தின் கதாப்பாத்திர போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளது.இது ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்தபடத்தில் சிம்ரன் நாச்சியாகவும் முத்துக்குமார் ஞானமாகவும் சனன்ந்த் ராக்கியாகவும் நடிக்கிறார்கள் என தெரியவருகிறது. இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்து வருகிறது.