எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் நடத்திய கூட்டத்தில் நகராட்சி தேர்தல் குறித்து விவரிக்கப்பட்டுள்ளது.
.சிவகங்கை மாவட்டத்தில் உள்ள இளையான்குடியில் எஸ்,டி.பி.ஐ. கட்சியின் நகராட்சி தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டமானது நகர் தலைவர் சின்ஜான் காதர் இப்ராகிம் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் துணைத்தலைவர் முகமது அசாருதீன், அமைப்புச் செயலாளர் முகமது ஷாலித், மாவட்ட பொருளாளர் செய்து காசிம், நகர் பொருளாளர் சுல்தான் அலாவுதீன், தொழிற்சங்க தலைவர் அமீர் அலி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் நகராட்சி தேர்தலில் வெற்றி பெறுவது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. மேலும் வெற்றி பெறும் தொகுதிகளை கண்டறிந்து அதன் வேட்பாளர்களை அறிவித்துள்ளனர்.