தமிழ்நாட்டில் இன்று ஒரே நாளில் 1,31,684 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில், 24,418 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்மூலம், மொத்த பாதிப்பு 33,03,702 ஆக அதிகரித்துள்ளது.
வீட்டுத் தனிமையில் இருப்பவர்களையும் சேர்த்து தற்போது 2,08,350 பேர் கொரோனா பாதித்து சிகிச்சையில் உள்ளனர். இன்று மட்டும் 27,885 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். மேலும் கொரோனா பாதிப்பால் இன்று மட்டும் 46 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதன்படி, மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 37,506 ஆக அதிகரித்துள்ளது. இன்று மட்டும் சென்னையில் 4,508 பேருக்கும், செங்கல்பட்டில் 1,614 பேருக்கும், கோயம்புத்தூரில் 3,309 பேருக்கும், ஈரோட்டில் 1,198 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.