சட்ட விரோதமாக மது விற்ற வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அமலோற்பவம் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஆறுமுகநேரி பேருந்து நிலையம் அருகில் சந்தேகத்திற்கிடமான வகையில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். இதனை பார்த்த காவல்துறையினர் அவரை மடக்கிப் பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர் ஆறுமுகநேரி பகுதியில் வசிக்கும் பாலாஜி என்பது காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது.
மேலும் அவர் அரசு முத்திரையுடன் கூடிய மதுபாட்டில்களை கூடுதல் விலைக்கு விற்று கொண்டிருந்ததும் காவல்துறையினருக்கு தெரியவந்துள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் பாலாஜியை கைது செய்ததோடு அவரிடமிருந்து 10 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.