பனியன் நிறுவன உரிமையாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள அத்திமரத்தோட்டம் பகுதியில் நாகராஜ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் திருமுருகன்பூண்டி பகுதியில் பனியன் நிறுவனம் நடத்தி வந்துள்ளார். இந்நிலையில் நாகராஜுக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்தும் பெண் கிடைக்கவில்லை. இதனால் நாகராஜ் மன வருத்தத்தில் இருந்துள்ளார். மேலும் தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நாகராஜ் பனியன் கம்பெனி நடத்துவதற்கு உறவினர்களிடம் கடன் வாங்கியுள்ளார். ஆனால் அவரால் உரிய நேரத்தில் கடனை திருப்பி செலுத்த முடியவில்லை.
இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த நாகராஜ் கடந்த சில நாட்களாக மன அழுத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் நிறுவனத்தில் வேலை ஆட்கள் யாரும் இல்லாத நேரத்தில் நாகராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த திருமுருகன்பூண்டி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நாகராஜின் உடலை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.