Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

போலீசார் அதிரடி ரோந்து…. வசமாக சிக்கிய 2 பேர்…. 12 கிலோ புகையிலை பறிமுதல்….!!

அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை வைத்திருந்த 2 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கேணிக்கரை சப்-இன்ஸ்பெக்டர் கார்மேகம் தலைமையில் காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் காட்டூரணி இரட்டை ஆலமரம் அருகே 2 பேர் இருசக்கர வாகனத்தில் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்துள்ளனர். 

இதனையடுத்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் அவர்கள் ராமநாதபுரம் வசந்தநகர் பகுதியை சேர்ந்த தவ்பீக் கான், பரமக்குடியை சேர்ந்த ராமஜெயம் என்பது தெரியவந்துள்ளது. இதனைதொடர்ந்து அவர்களிடம் அரசால் தடை செய்யப்பட்ட 12 கிலோ புகையிலை பொருட்கள் இருந்துள்ளது. அதனை பறிமுதல் செய்த காவல்துறையினர் ராமஜெயம் மற்றும் தவ்பீக் கான் ஆகிய 2 பேரையும் கைது செய்துள்ளனர்.

Categories

Tech |