தேர்தல் பாதுகாப்பு பணிகளை காவல்துறை சூப்பிரண்டு ஆய்வு செய்துள்ளார்.
ராணிபேட்டை மாவட்டத்தில் உள்ள 8 பேரூராட்சிகள் மற்றும் 6 நகராட்சிகளில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இதனால் கலவைப் பேரூராட்சியில் நடைபெறும் தேர்தல் குறித்த பணிகளை காவல்துறை சூப்பிரண்டு தீபா சத்யன் ஆய்வு செய்துள்ளார். இதில் சப்-இன்ஸ்பெக்டர் சரவண மூர்த்தி, பேரூராட்சி செயல் அலுவலர் ரேவதி மற்றும் பேரூராட்சி ஊழியர்கள் பலர் உடனிருந்தனர்.