துலாம் ராசி அன்பர்களே…!! இன்று அதிர்ஷ்ட வாய்ப்புகள் அலைமோதும் நாளாக இருக்கும். திட்டமிடாமல் செய்யும் காரியங்கள் கூட நல்ல வெற்றி இருக்கும். ஆடை, ஆபரணப் பொருள்கள் சேரும். அதேபோல் புத்தாடைகள் வாங்கி மகிழ்வீர்கள். இன்று பணத்தேவைகள் பூர்த்தியாகும். தொழில் தொடர்பான பிரச்சினைகள் சரியாகும், முன்னேற்றமும் ஏற்படும். வாடிக்கையாளரிடம் அனுசரித்து செல்லுங்கள் அது போதும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அவசரப்படாமல் நிதானமாக பணிகளை கவனிப்பது நல்லது.
இன்று பணத்தேவை அதிகரிக்கும். எல்லா காரியங்களும் கொஞ்சம் தாமதப்படும் பின்னர் தான் சரியாகும். கூடுமானவரை பொறுமையை இன்று விட்டுவிடாதீர்கள். முடிந்தால் ஆலயம் சென்று வாருங்கள். சிறப்பாகவே இருக்கும். செய்கின்ற காரியங்கள் வெற்றியைக் கொடுக்கும். இன்று குடும்பத்தைப் பொறுத்தவரை சிறப்பான முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அன்பு இருக்கும். இன்று அக்கம் பக்கத்தினர் இடம் பேசும் பொழுது மட்டும் கொஞ்சம் நிதானத்தை கடைப்பிடியுங்கள்.
இன்று கூடுமானவரை செய்யும் காரியங்களை யோசித்து செய்யுங்கள், அது போதும். இன்று முக்கியமான பணியை நீங்கள் மேற்கொள்ளும் பொழுது, வெள்ளை நிறத்தில் ஆடை அணிந்து கொண்டு செல்லுங்கள். வெள்ளை நிறம் அதிர்ஷ்டத்தை கொடுக்கக் கூடிய அளவில் இருக்கும். அதுமட்டுமில்லாமல் இன்று சிவபெருமான் வழிபாட்டை மேற்கொண்டு காரியத்தில் ஈடுபடுங்கள். அனைத்துக் காரியமும் நல்லபடியாக நடக்கும்.
இன்று உங்களுக்கான அதிஷ்டமான திசை : மேற்கு
அதிஷ்ட எண் : 6 மற்றும் 9
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை மற்றும் சிவப்பு நிறம்