கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து 2 வயது ஆண் குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டத்திலுள்ள சங்கரன்கோவில் பகுதியில் லாரி டிரைவரான சங்கர் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு துர்காதேவி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு 2 வயதுடைய அமுதன் என்ற ஆண் குழந்தை இருந்துள்ளது. இந்நிலையில் வீட்டு வாசலில் விளையாடி கொண்டிருந்த அமுதன் திடீரென காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்த துர்காதேவி குழந்தையை அனைத்து இடங்களிலும் தேடி பார்த்துள்ளார்.
அப்போது எதிர் வீட்டில் இருக்கும் கழிவுநீர் தொட்டியில் குழந்தை விழுந்து கிடந்ததை பார்த்து துர்காதேவி அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து உடனடியாக குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் அமுதன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதுகுறித்த புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.