பெண்ணிடமிருந்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஆலங்குளம் பகுதியில் தங்கராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு அமுதா என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் உறவினர் வீட்டு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அமுதா நடந்து சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக வந்த மர்ம நபர் அமுதாவின் கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியை பறித்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இதுகுறித்து அமுதா காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.