இன்று பகல் மூன்று மணியளவில் மேட்டுப்பாளையத்திலிருந்து கோயம்புத்தூரை நோக்கி சென்ற அரசுப்பேருந்தும், கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி வந்த அரசு பேருந்தும் நிலைத்தடுமாறி ‘எங்கேயும் எப்போதும்’ பட பாணியில் நேருக்கு நேர் மோதிக்கொண்டன. காரமடை மெட்ரோ பள்ளி அருகே நடந்த இந்த விபத்தில் அரசு பேருந்து ஓட்டுனர்கள் உட்பட பேருந்தில் பயணம் செய்த 10 பேர் படுகாயமடைந்தனர்.
காயமடைந்த அனைவரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மேட்டுப்பாளையம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் நடைபெற்ற இந்த விபத்தின் காட்சிகள் அருகில் இருந்த ஒரு கடையில் பொறுத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. மேலும், இந்த விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Two govt buses travelling in opposite directions collided head-on injuring 30 passengers. While those grievously injured have been admitted to CMCH, the others have been admitted to Mettupalayam GH.#Accident #GovernmentBus #Mettupalayam #GH #CMCH #TheCovaiPost pic.twitter.com/0aDQJ1TcbI
— The Covai Post (@CovaiPost) December 24, 2019