கோவிலுக்குள் நுழைந்து உண்டியல் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அம்பலக்கடை பகுதியில் கேளேஸ்வரம் சிவன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் நள்ளிரவு நேரத்தில் கோவிலுக்குள் புகுந்த மர்ம நபர்கள் உண்டியல் பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலை கோவிலுக்கு சென்ற பூசாரி உண்டியல் பணம் திருடு போனதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கோவிலுக்குள் நுழைந்து பணத்தை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.