Categories
சென்னை மாவட்ட செய்திகள்

எந்த முன்னேற்றமும் இல்லை…. காதல் மனைவி எடுத்த விபரீத முடிவு…. அதிர்ச்சியில் குடும்பத்தினர்…!!

பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள ராயப்பேட்டை பகுதியில் புகழ் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 8 வருடங்களுக்கு முன்பு புகழேந்தி கீதா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிகளுக்கு 2 ஆண் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் உடல் நலக்குறைவால் அவதிப்பட்ட கீதா பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். ஆனாலும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

இதனால் மன உளைச்சலில் இருந்த கீதா தனது வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |