Categories
தேசிய செய்திகள்

“ஒரு பைசா செலவில்லாமல் தொழில் தொடங்கலாம்…” அரசின் பலே திட்டம்…!! வெளியான சூப்பர் அறிவிப்பு….

மத்திய அரசு மீன்பிடித்தல் தொழிலை ஊக்குவிப்பதற்காக பிரதமர் மத்ஸ்ய சம்பதா யோஜநா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

மீன் உற்பத்தியை மேம்படுத்துவது, தரம், உட்கட்டமைப்பு மற்றும் சந்தைப்படுத்துதல் போன்றவற்றிற்காக இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்திற்காக மத்திய அரசு 20 ஆயிரத்து 50 கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளது. நாடு முழுவதும் மீன் வளர்ப்பின் மூலம் பணம் சம்பாதிக்க விரும்புவோர் இந்த திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம்.

அதோடு மீனவர்கள் மீன் உற்பத்தியாளர்கள், மீன் சார்ந்த தொழிலாளர்கள் மற்றும் மகளிர் சுய உதவி குழுக்களை சேர்ந்தவர்கள் இந்த திட்டத்தின் மூலம் பயன் பெறலாம். மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ள இந்த திட்டத்தில் தொழிலுக்கு தேவையான மொத்த செலவையும் அரசே ஏற்றுக் கொள்ளும். இதற்கு ஆகக்கூடிய மொத்த செலவில் 60 சதவிகிதம் மத்திய அரசும் 40 சதவீதம் மாநில அரசும் ஏற்றுக் கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |