Categories
உணவு வகைகள் சமையல் குறிப்புகள்

அசைவ பிரியர்களுக்கு அறுசுவை வாத்து வறுவல் ….!!

                                                                                                                                                                                                                                                                              வாத்து பெப்பர் வறுவல்

 

தேவையான பொருட்கள் :

வாத்துக்கறி                              – அரை கிலோ

எண்ணெய்                                 – தேவைக்கேற்ப

மஞ்சள் தூள்                               – கால் டீஸ்பூன்

உப்பு                                                –  தேவைக்கேற்ப

தயிர்                                                  –  கால் டீஸ்பூன்

இஞ்சி பூண்டு விழுது                –  1 டீஸ்பூன்

 

தாளிக்க :

காய்ந்த மிளகாய்                          – 4

மிளகு                                                    – அரை டீஸ்பூன்

பூண்டு பல்                                        – 6

கறிவேப்பிலை                                 – 2 கொத்து

 

அரைக்க :

காய்ந்த மிளகாய்                            – 2

மிளகு                                                     – 6

தனியா தூள்                                     – 1 டீஸ்பூன்

சீரகம்                                                    – அரை டீஸ்பூன்

Image result for வாத்து பெப்பர் வறுவல்

செய்முறை :

வாத்துக் கறியை சுத்தம் செய்து கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.  ஒரு பாத்திரத்தில் சுத்தம் செய்த வாத்துக்கறி துண்டுகளைப் போட்டு மஞ்சள் தூள், உப்பு, தயிர், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பிரட்டி ஊற வைக்க வேண்டும்.  வாணலியில் மிளகு, சீரகம், காய்ந்த மிளகாய், ஆகியவற்றை போட்டு வறுக்கவும்.  வறுத்த பொருட்களை எடுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடி செய்துக் கொள்ள வேண்டும்.

வாணலியில் 4 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் ஊற வைத்திருக்கும் கறி துண்டுகளை போட்டு ஒரு முறை நன்கு கிளறி விட்டு மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.  மற்றொரு வாணலியில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் மிளகு, பூண்டு, மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்.  அதன் பிறகு தாளித்தவற்றை வேக வைத்த வாத்துக் கறியுடன் சேர்த்து கலக்கி சிறிது நேரம் கழித்து இறக்கி விடவும்.

         இப்பொது  மிகவும் சுவையான   வாத்து பெப்பர் வறுவல் தயார்…!!!

Categories

Tech |