திமுக எம்பி கே.பி சங்கர் மாநகராட்சி பொறியாளரை அடித்ததற்கு கண்டனம் தெரிவித்து எதிர்கட்சி தலைவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, “திருவொற்றியூர் பகுதியில் உள்ள நடராஜன் தோட்டம் இடத்தில் சாலை போடும் பணி நடைபெற்று கொண்டிருந்தபோது ஒப்பந்ததாரர் முறைப்படி திமுக எம்எல்ஏ வந்து பார்க்காததால் ஆத்திரமடைந்த திமுக எம்எல்ஏ அடியாட்களுடன் சென்று சாலை போடும் பணியை வலுக்கட்டாயமாக நிறுத்தியுள்ளார். அதோடு சாலை போடும் பணியை மேற்பார்வை செய்த பொறியாளரை மானாவாரியாக அடித்துள்ளார். அதோடு ரோடு போடுவதற்கு பயன்படுத்தி வந்தத தார் மற்றும் ஜல்லி கலவை இயந்திரங்களை வலுக்கட்டாயமாக அந்தப் பகுதியிலிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் வெட்டவெளியில் நடந்ததால் பொதுமக்கள் பலர் இதை பார்த்துள்ளனர். இதனால் என்ன செய்வது என்று அறியாத திமுக தலைமை எம்எல்ஏவை கட்சி பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளது.. இதுபோன்ற கண்துடைப்பு நாடகங்களை திமுக தலைமை நிறுத்த வேண்டும் எனவும் பாதிக்கப்பட்ட பொறியாளரின் குடும்பத்திற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர் அதோடு இவ்வாறு பாதிப்புக்கு உள்ளாகும் போது ஊடகங்கள், சமூக ஊடகங்கள் தெரியப்படுத்த வேண்டும் அதோடு காவல்துறையில் நிலவும் புகார் அளிக்க வேண்டும். ஆளுங்கட்சியில் அராஜகத்தால் பாதிக்கப்படும் அரசுத் துறையை சேர்ந்தவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளிக்க ஒருபோதும் தயங்க கூடாது.” அவர் கூறினார்.