சுமார் 75 வருடங்களுக்கு முன் போரில் மூழ்கிய அமெரிக்காவின் யுஎஸ்எஸ் என்ற போர்க்கப்பல், தற்போது கண்டறியப்பட்டிருக்கிறது.
கடந்த 1944 ஆம் வருடத்தில் அமெரிக்கா, ஜப்பானை எதிர்த்து போரிட்டது. அப்போது, யுஎஸ்எஸ் என்ற அமெரிக்க போர்க்கப்பல் பயன்படுத்தப்பட்டது. அந்த காலகட்டத்தில் இந்த போர்க்கப்பல் உலகிலேயே மிகப்பெரிதாக கருதப்பட்டது.
ஜப்பான் கடற்படையுடன் நடந்த மிகக்கடும் போரில், இந்த போர்க்கப்பலை, ஜப்பான் நாட்டின் யாமோடா தாக்கியது. இதில், அமெரிக்க போர்க்கப்பல் சுமார் 186 நபர்களுடன் தண்ணீரில் மூழ்கியது. சுமார் 75 வருடங்களுக்கு பிறகு, தற்போது அந்த கப்பல் எங்கு உள்ளது? என்பது தொடர்பில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, அந்த கப்பலின் சேதமடைந்த பாகங்கள் சுமார் ஆறு கிலோமீட்டர் ஆழத்தில் மூழ்கியிருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.